21 கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை காலுறைகளில் மறைத்துவைத்து கடத்தமுற்பட்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் சுமார் 51 தங்க பிஸ்கட்டுகளை தனது இரு காலுறைகளிலும் சூட்சுமமாக மறைத்துவைத்து ஊழியர்களுக்கான வெளியேறும் வாயில் (staff gate) வழியாக கடத்த முயற்சித்துள்ளார்.
5.941 கிலோகிராம் எடைகொண்ட குறித்த தங்கத்தின் பெறுமதி 10,524,575.35 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.









