எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் தலா ஒரு மில்லியன் ரூபா உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படவுள்ளது.
குறித்த விபத்தில் 15 பேர் பலியான நிலையில் 18 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.









