வவுனியா பொருளாதார மத்திய நிலையம் 7 வருடங்களின் பின்னர் இன்று மீண்டும் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கடந்த 2018ஆம் ஆண்டு வவுனியா மதவுவைத்தகுளத்தில் 293மில்லியன் ரூபாய் செலவில் விசேட பொருளாதார மத்தியநிலையம் அமைக்கப்பட்டது.
எனினும் பல்வேறு காரணங்களில் அதனை திறப்பதில் இதுவரை காலமும் இழுபறி நிலையிலிருந்த காணப்பட்டது. அதனால் சேதமடைந்த காணப்பட்ட வவுனியா பொருளாதார மத்திய நிலைய கட்டிடம் தற்போது புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மத்திய நிலையத்தில் 50 வர்த்தக தொகுதிகள் அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 35 வர்த்தக தொகுதிகள் வவுனியா மொத்த வியாபார சந்தை வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு கடை சதோச நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









