சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கென புதிய பணிக்குழுவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுற்றுலாத்துறைக்கு புத்துயிரளித்தல், அதனூடாக தேசிய பொருளாதாரத்திற்கு நேரடி வருமான வளர்ச்சியை உருவாக்குதல் உள்ளிட்ட முக்கிய நோக்கங்களை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையின் முன்னேற்றம் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கான அதிகாரம் குறித்த பணிக்குழுவுக்கு வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை தயாரித்தல், உரிய தீர்மானங்களை செயற்படுத்தல், சுற்றுலாப்பயணிகள் மற்றும் தொழில்முனைவோர் எதிர்நோக்கும் சவால்களை நிவர்த்தித்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.









