ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை இந்தோனேசியாவுக்கு பயணமாகியுள்ளார். அந்நாட்டின் பாலி நகரில் நடைபெறவுள்ள 10 ஆவது உலக நீர் மாநாட்டின், உயர்மட்டக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ அழைப்பு விடுத்தநிலையில், அவரது அழைப்பை ஏற்று ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளது.
கூட்டு செழிப்புக்கான நீர் எனும் தொனிப்பொருளில் 10 ஆவது உலக நீர் மாநாடு இன்று முதல்; எதிர்வரும் 20ம் திகதி வரை இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையாற்றவுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ உள்ளிட்ட அந்நாட்டின் பல உயர்மட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.









