அனைத்து அரச நிறுவனங்களிலும் கைரேகை ஸ்கேனர்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுமென பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
பல அரச அலுவலகங்களில் ஏற்கனவே கைரேகை ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், பல நிறுவனங்கள் இன்னும் இந்த முறையைப் பின்பற்றவில்லை.
எனவே அனைத்து இடங்களிலும் ஸ்கேனர்கள் அறிமுகப்படுத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யுமெனவும், இது ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் வசதியான செயன்முறை எனவும் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது அரசாங்கத்தினால் வழங்கப்படும் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இக்கொடுப்பனவுகள் துல்லியமாக வழங்கப்படுவதை உறுதி செய்வது மிக முக்கியமாகும்.
அரச ஊழியர்களுக்கு அரச நிதியில் ஊதியம் வழங்கப்படுவதால், சம்பளம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் முறையாகக் கணக்கிடப்பட வேண்டும்.
எனவே அனைத்து அரச நிறுவனங்களிலும் கைரேகை ஸ்கேனர்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.









