49 வது தேசிய விளையாட்டு விழாவில் கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள, 49வது தேசிய விளையாட்டு விழாவின் ககரப்பந்தாட்ட போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் இன்று (28) காலி , தடெல்ல கடற்கரையில் ஆரம்பமானது.
ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரவுகளில் தலா 18 அணிகள் கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
போட்டிகள் இன்று முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை காலியின் தடெல்ல கடற்கரையில் நடைபெறவுள்ளன.









