கென்யாவில் மரண சடங்கொன்றில் பங்கேற்றவர்கள் பயணித்த பஸ் வண்டி விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.பெரும்பாலான விபத்துக்கள் பதிவாகியுள்ள அதிவேக பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் வண்டி விபத்துக்கு முககொடுத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் 10 பெண்கள் உள்ளடங்குவதாகவும் அவர்கள் அனைவரும் ஒரே குடுப்பத்தை சேர்ந்தவர்களெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை கென்ய தலைநகர் நைரோபியின் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 06 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.









