வாகனப் பதிவு வரிசையில் தொடர்புடைய எண்கள் இலவசமாக வழங்கப்பட்டாலும், பலர் வெற்றி எண்ணை( funcy number ) அல்லது அவர்கள் எதிர்பார்க்கும் கவர்ச்சிகரமான எண்ணைப் பெற பணம் செலுத்த வேண்டும் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
1 முதல் 999 வரையான இலக்கங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய், 1000 முதல் 1999 வரையிலான இலக்கங்களை பெற இரண்டு இலட்சம் ரூபாய், 2000 முதல் 2999 வரையிலான இலக்கங்களைப் பெற மூன்று இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.
3000 முதல் 3999 வரையிலான இலக்கங்களுக்கு நான்கு இலட்சம் ரூபாய் மற்றும் 4000 முதல் 4999 வரையிலான இலக்கங்களுக்கு , ஐந்து இலட்சம் ரூபாய் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு செலுத்தப்பட வேண்டும்.
5000 முதல் 9999 வரை விருப்பமான இலக்கங்களைப் பெற்றுக்கொள்ள கொள்வனவாளர்கள் பத்து இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள எண்களை பத்து இலட்சம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டிய சூப்பர் எண் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.









