சந்தேகத்தின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்வை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்து ஊழல் செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட வைத்தியர் மஹேஷி விஜேரத்னவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதற்கமைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலித்த பின்னர், பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.
இதேவேளை வைத்தியர் மஹேஷி விஜேரத்ன ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு செல்லவும், வெளிநாடு பயணிக்கவும் தடை விதித்து நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.









