தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நிசான்த ஜயவீர, பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் இன்று சத்திப்பிரமாணம் செய்துகொண்டார்.
அதனையடுத்து பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையெழுத்திட்டார்.
தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் ஊடாகப் பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, உஸ்ஹெட்டிகே தொன் நிசான்த ஜயவீர தேசியப் பட்டியலின் ஊடாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலைத் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த ஜூலை 07ம் திகதி வெளியிட்டிருந்த நிலையில் அவர் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.









