இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான வர்த்தக வரியை குறைக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் வெங்காயத்திற்கான 30 ரூபா வரியை 10 ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கவும், நுகர்வோருக்கு நியாயமான விலையை உறுதி செய்யவும் குறுகிய கால நடவடிக்கையாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரி குறைப்பு டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் எதிர்காலத்தில் பெறப்படும் கொள்கை ரீதியிலான முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.









