மன்னார் விடத்தல்தீவு இராணுவ முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் விடத்தல்தீவு இலங்கை இராணுவ பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வரும் வீரர்களுக்கு காய்ச்சல் பரவியுள்ளதன் காரணமாக அதன் பயிற்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. .
கடந்த நவம்பர் 11ஆம் திகதி முதல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பயிற்சி வீரர்கள் காய்ச்சல் அறிகுறி காரணமாக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில்இ தற்போது 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையால்இ அவர் மேலதிக சிகிச்சைக்காக அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு நிறுவகத்திற்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை காய்ச்சல் பரவுவது தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.









