நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது சாபாநாயகர் தெரிவு அதனையடுத்து புதிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் என்பன நடைபெறவுள்ளன.
159 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் புதிய பலமான அரசாங்கம் அமைந்துள்ள நிலையில் யார் பிரதமர் என்ற கேள்வி எழுந்துள்ளது. 25 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் பிரதமராக தற்போதைய அமைச்சரான விஜித ஹேரத்த நியமிக்க படலாமெனவும் ஊகங்கள் வெளியாகியுள்ளன.
காலநிதி ஹரினி அமரசூரியவிற்கும் முக்கிய பதவி வழங்கப்படும் அத்தோடு கட்சிக்காக தகுதிவாய்ந்த பலர் அமைச்சி பொறுப்புக்களை பெறவுள்ளனர்.









