இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை ஆரம்பமானது.
மாலை 4.00 மணி வரை இடம்பெறும். தற்போதுவரை சுமூகமான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்
இதன்படி வாக்காளர்கள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்றுஇ உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
22 தேர்தல் மாவட்டங்களிலpருந்து 196 உறுப்பினர்கள் இம்முறை தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதேவேளை தேர்தலில் வாக்களிக்க 1 கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 352 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் அதியாக இடம்பெற்றுவருகின்றன. மாலை 4 மணிக்கு வாக்களிப்பு நிறைவடைந்ததும் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு நாடுமுழுவதும் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.









