அறுகம்பே பிரதேசத்திற்கான சுற்றுலா பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.
அறுகம்பே பிரதேசம் தொடர்பாக 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுலா பயணத் தடை நீக்கப்பட்டுளளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இதனிடையே இலங்கையின் அறுகம்பை பிரதேசத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கூறி இஸ்ரேல் தனது பிரஜைகளுக்குப் பிறப்பித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சபையால் அந்த எச்சரிக்கை அளவை நான்கில் இருந்து இரண்டாக குறைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அறுகம்பை பிரதேசத்தில் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வௌியாகியிருந்தன
இதனால் மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இஸ்ரேல் தனது குடிமக்களுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









