அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய உப ஜனாதிபதி கமலா ஹரிஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கமலா ஹாரிஸ் ஜோர்ஜியாவிலும் டிரம்ப் வடக்கு கெரோலினாவில் ஆதரவு கோரி பிரச்சாரங்களில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலின் இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அயோவா மாகாணத்தில் நடந்த இந்த கருத்துக்கணிப்பில் கமலா ஹரிஸ் முன்னிலையில் உள்ளார். அவருக்கு 47 சதவீத ஆதரவு கிடைத்துள்ளதாகவும் , டிரம்புக்கு
44 சதவீத ஆதரவு கிடைத்துள்ளதாகவும் , கமலா ஹரிஸ் 3 சதவீதம் கூடுதல் வரவேற்பை டிரம்பை விட பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை மற்றொரு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டிரம்ப் முன்னிலையில் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இரு வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுமென அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.









