எதிர்வரும் டிசம்பர் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
சந்தையில் தற்போது கோழி இறைச்சியின் கையிருப்பு அதிகளவில் காணப்படுவதால், விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் டிசம்பர் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், சந்தையில் உறைநிலைப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியின் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதால், நுகர்வோர் தேவையைப் பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையில் பாரிய மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளமைக்கு முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ளமையும், உற்பத்தி குறைவடைந்துள்ளமையும் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கும், விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்பினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









