Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

ஆப்கானிஸ்தானில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்தத் தலிபான்கள் தடை

கார்த்திகை 28, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
ஆப்கானிஸ்தானில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்தத் தலிபான்கள் தடை

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பால்க் (Balkh) மாகாணத்தில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்துவதற்குத் தலிபான் நிர்வாகம் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, அரச அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பொதுவான அடையாளச் சொற்களைப் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, பெண்களை ‘பீபி’ (Bibi) என்ற பெயரில் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘பீபி’ என்பது பொதுவாக வயதான பெண்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.

மேலும், சில சந்தர்ப்பங்களில் பெண்களை ‘ஆடு’, ‘பசு’ போன்ற இழிவான சொற்களால் அழைப்பதாகவும் பெண்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை பெண்களின் தனிப்பட்ட அடையாளத்தையும் கண்ணியத்தையும் பாதிக்கும் செயல் என ஆப்கானிஸ்தான் பெண்ணுரிமை ஆர்வலர் லாலா ஒஸ்மானி சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, மருத்துவமனைகளில் பெண்களின் பெயர்களுக்குப் பதிலாக ஒரே மாதிரியான பெயர்களைப் பயன்படுத்துவது மருத்துவப் பதிவுகள் மற்றும் மருந்துச் சீட்டுகளில் குழப்பங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், இதனால் தவறான சிகிச்சைகள் வழங்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, இந்தத் தடை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படக்கூடும் என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பெண்ணுரிமை அமைப்பான Femena-வின் ஆப்கானிஸ்தான் திட்டப் பணிப்பாளர் சுபைதா அக்பர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டு தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொது வாழ்க்கை தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பெண்களின் பெயர்களைப் பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

 

முந்தைய செய்தி

Hatton TVTC – 2027ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை

அடுத்த செய்தி

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படாது

தொடர்புடைய செய்திகள்

மரணத்திலும் பல உயிர்களுக்கு வாழ்வளித்த 19 வயது இளைஞர்!
அண்மைய செய்திகள்

மரணத்திலும் பல உயிர்களுக்கு வாழ்வளித்த 19 வயது இளைஞர்!

கார்த்திகை 28, 2026
பிரபல WWE வீரர் பிரான்சன் ரீட் 38 வயதில் காலமானார்!
அண்மைய செய்திகள்

பிரபல WWE வீரர் பிரான்சன் ரீட் 38 வயதில் காலமானார்!

கார்த்திகை 28, 2026
கோழியிறைச்சி , முட்டை விலையில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படாது

கார்த்திகை 28, 2026
Hatton TVTC – 2027ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை
அண்மைய செய்திகள்

Hatton TVTC – 2027ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை

கார்த்திகை 28, 2026
நாட்டில் சீரற்ற வானிலை
அண்மைய செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று (28) பலத்த மழை ..

கார்த்திகை 28, 2026
o/l Exam அடுத்த வருடம் மார்ச்  மாதம்..
அண்மைய செய்திகள்

O/l Exam – டிசம்பர் 02 முதல் தனியார் வகுப்புகளுக்குத் தடை!

கார்த்திகை 28, 2026
கிளிநொச்சி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு – அமைச்சர் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை!
அண்மைய செய்திகள்

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

கார்த்திகை 28, 2026
வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

இலங்கையின் 07 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

கார்த்திகை 28, 2026
அடுத்த செய்தி
கோழியிறைச்சி , முட்டை விலையில்  மாற்றம்

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படாது

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.