2026ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தனியார் கல்வி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, பரீட்சைக்குத் தொடர்புடைய தனியார் கல்வி வகுப்புகளை நடத்துதல், பாடம் சார்ந்த விரிவுரைகளை நடத்துதல், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் 3,519 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தமது இறுதிக்கட்டத் தயார்படுத்தல்களை உரிய முறையில் மேற்கொள்வதுடன், பரீட்சைத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும், பரீட்சை தொடர்பான விதிமுறைகளை மீறாமல் செயற்படுமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.









