Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

கார்த்திகை 28, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
கிளிநொச்சி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு – அமைச்சர் சந்திரசேகர் உடனடி நடவடிக்கை!

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறவுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்றொழில் அமைச்சின் செயலாளர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் இந்தியாவுக்குச் சென்று, அந்நாட்டு கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

இந்தியா – இலங்கை கடற்றொழில் தொடர்பான கூட்டுச் செயற்குழுவின் கூட்டமாக நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளன.

குறிப்பாக, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்தல், தடைசெய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடி முறையைப் பயன்படுத்துதல் மற்றும் இதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் கடல் வளங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கை கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், கடற்படை, பொலிஸ், கடலோரக் காவல்படை, தேசிய நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

இதற்கு முன்னதாக, 2024ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் இந்திய – இலங்கை கடற்றொழில் கூட்டுச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை மூலம் நீண்டகாலமாகத் தொடரும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வொன்றை எட்ட முடியும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் தமிழக அரச தரப்பினரும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம், கடல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவைப் பேணுதல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முந்தைய செய்தி

இலங்கையின் 07 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

அடுத்த செய்தி

O/l Exam – டிசம்பர் 02 முதல் தனியார் வகுப்புகளுக்குத் தடை!

தொடர்புடைய செய்திகள்

மரணத்திலும் பல உயிர்களுக்கு வாழ்வளித்த 19 வயது இளைஞர்!
அண்மைய செய்திகள்

மரணத்திலும் பல உயிர்களுக்கு வாழ்வளித்த 19 வயது இளைஞர்!

கார்த்திகை 28, 2026
பிரபல WWE வீரர் பிரான்சன் ரீட் 38 வயதில் காலமானார்!
அண்மைய செய்திகள்

பிரபல WWE வீரர் பிரான்சன் ரீட் 38 வயதில் காலமானார்!

கார்த்திகை 28, 2026
கோழியிறைச்சி , முட்டை விலையில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படாது

கார்த்திகை 28, 2026
ஆப்கானிஸ்தானில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்தத் தலிபான்கள் தடை
அண்மைய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பெண்களின் உண்மையான பெயர்களைப் பயன்படுத்தத் தலிபான்கள் தடை

கார்த்திகை 28, 2026
Hatton TVTC – 2027ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை
அண்மைய செய்திகள்

Hatton TVTC – 2027ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை

கார்த்திகை 28, 2026
நாட்டில் சீரற்ற வானிலை
அண்மைய செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று (28) பலத்த மழை ..

கார்த்திகை 28, 2026
o/l Exam அடுத்த வருடம் மார்ச்  மாதம்..
அண்மைய செய்திகள்

O/l Exam – டிசம்பர் 02 முதல் தனியார் வகுப்புகளுக்குத் தடை!

கார்த்திகை 28, 2026
வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

இலங்கையின் 07 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

கார்த்திகை 28, 2026
அடுத்த செய்தி
o/l Exam அடுத்த வருடம் மார்ச்  மாதம்..

O/l Exam – டிசம்பர் 02 முதல் தனியார் வகுப்புகளுக்குத் தடை!

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.