தாவூதி போரா சமூகத்தின் 60 மில்லியன் ரூபாய் நிதிப் பங்களிப்புடன் நவீனமயப்படுத்தப்பட்ட பம்பலப்பிட்டி புகையிரத நிலையம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக மீளத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
‘தூய்மையான இலங்கை’ திட்டத்துடன் இணைந்த ‘கனவு இலக்கு’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நிலையத்தின் பிரதான கட்டடம், நடைமேடைகள், சுகாதார வசதிகள், மின்சாரம் மற்றும் நீர் விநியோகக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், சிசிரிவி கண்காணிப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பிரதான வீதியையும் புகையிரத நிலையத்தையும் இணைக்கும் புதிய பாதசாரி மேம்பாலமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.









