ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவை, கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.
அவர் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பிலே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன்இ அவர் இதுவரை வகித்த அனைத்து பதவிகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தவும் கட்சி தீர்மானித்துள்ளது.
ஊழல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்படுவதையோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையோ ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் எதிர்ப்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.









