ஈரானுடனான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க ஜனாதபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். விரைவில் இருதரப்பினருக்குமிடையில் உடன்பாடொன்று எட்டப்படும். அல்லது யாரும் விரும்பத்தகாத சில விடயங்களை செய்வோம் என அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தரான பாகிஸ்தானிடம் இருந்து பெற்ற அமெரிக்காவின் முன்மொழிவுகளை ஆராய்ந்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை விடுவிப்பது மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகையை முடிவுக்கு கொண்டுவருவது உள்ளிட்ட தமது கோரிக்கைகளையும் வலிறுத்துவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.









