நாட்டின் பல பகுதிகளிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது, இன்று எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல்,சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அதீத வெப்பம் உணரப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நீண்ட நேரம் வெயிலில் இருப்பதோ அல்லது வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவதோ கடுமையான உடல் சோர்வை ஏற்படுத்துமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய நிலை தசைப்பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் போதியளவு நீரை அருந்துவது கட்டாயமாகும்.
அத்துடன் வெளிப்புர செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.









