நுண்கடன் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதற்கமைய நுண்கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி தெரிவித்துள்ளார்.
நுண்கடன் பிரச்சினையால் இதுவரை சுமார் 200 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல குடும்பங்கள் நுண்கடன் கொள்வனவாளர்களின் கைகளில் மாட்டி பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
எனவே அவ்வாறானவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அரசாங்கம் புதிய சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்விடயங்களைத் தெரிவித்துள்ளார்.









