2026 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை இடம்பெற உள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாளை மாலை வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பைச் சமர்ப்பிக்க உள்ளார்.
அதற்கமைய வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 8 ம் திகதி முதல் 6 நாட்கள் இடம்பெறவுள்ளது.
இரண்டாம் வாசிப்பின் வாக்கெடுப்பு 14 ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
குழுநிலை விவாதம் நவம்பர் மாதம் 15 ம் திகதி முதல் 17 நாட்கள் நடத்தப்படவுள்ளது.
மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ம் திகதி பிற்பகல் 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.









