மலையகப் பெருந்தலைவர் அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 26 ஆவது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
கொழும்பு பழைய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.காவின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வின் பின்னர் இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனிலும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் மலையக அரசியல் வரலாற்றில் என்றும் மறவாத மாமனிதராக திகழ்கின்றார்.
மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி இயற்கை எய்தினார்.
தனது 89வது வயதில் இயற்கை எய்தும் போது அன்னார், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராகவும், இலங்கை அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.









