தாய்லாந்தின் ராணி சிரிகிட் கிடியாகரா தனது 93 ஆவது வயதில் காலமானார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராணி சிரிகிட் கிடியாகரா நேற்று உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரது மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராணி சிரிகிட் மறைவையடுத்து மலேசியாவில் நாளை நடைபெற உள்ள ஏசியான் உச்சிமாநாட்டில் தாய்லாந்து பிரதமர் அனுடின் சருன்விரகுல் பங்கேற்கமாட்டார் என அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ராணி சிரிகிட் கிடியாகராவின் கணவரான தாய்லாந்து முன்னாள் மன்னர் அதுல்யடிஜ் கடந்த 2016ம் ஆண்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.









