இலங்கைக்கும் , சுவிட்சர்லாந்திற்கும் இடையில் எதிர்வரும் 28ம் திகதி முதல் நேரடி விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
வாரத்திற்கு இரு தடவைகள் என்ற அடிப்படையில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமையும் விமான சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுவிஸ் எயார்லைன்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சுவிஸ் எயார்லைன்ஸ் எடெல்வைஸ், இலங்கைக்கான குளிர்கால விமானங்களின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் இந்த பயணம் முன்னெடுக்கப்படவுள்ளது.









