ரந்தெனிகல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் 36 வது மற்றும் 37வது மைல்கலுக்கு இடைப்பட்ட பகுதியில் விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பஸ் வண்டியில் ஏற்பட்ட திடீர் இயந்திரக்கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பஸ் வண்டியின் சாரதி வீதி ஓரத்திலுள்ள பாறையில் மோதி பஸ் வண்டியை நிறுத்த முயற்சித்துள்ளார்.
காயமடைந்த 12 பேரும் சிகிச்சைகளுக்காக கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









