புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (20) மாலை ஏற்பட்ட தீப்பரவல் நீண்ட போராட்டத்தின் பின்னர் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தின் பெல் ரக ஹெலிகொப்டர்கள் இரண்டும் , கொழும்பு மாநகர சபையின் 12 தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.
புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில் வர்த்தக நிலையமென்றின் மூன்றாம் மாடியில் குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரை மதிப்பிடவில்லையெனவும், தீ விபத்து குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









