நைஜீரிய – கெமரூன் எல்லைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதலில் 35 போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக நைஜீரியா அறிவித்துள்ளது.நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் ஆயுதக்குழுக்களின் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினர் பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நைஜீரிய -கெமரூன் எல்லைக்கு அருகிலுள்ள போர்னோ மாநிலத்தின் கும்ஷே பகுதியில் நான்கு இலக்குகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக நைஜீரிய விமானப்படை செய்தித் தொடர்பாளர் எஹிமென் எஜோடேமை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜீரியாவில் பொக்கோஹராம் உள்ளிட்ட ஆயுதகுழுக்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி மக்களின் வாழ்வியலை பாதிக்கசெய்வதோடு,இராணுவ முகாம்களை கைப்பற்றி இராணுவ வீரர்களை கொலைச்செய்தும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கின்றன.
நைஜீரியாவின் 16 ஆண்டுகால ஆயுத மோதல்களில் 35,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொல்லப்பட்டுள்ளதோடு ,
2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமது சொந்த வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.









