மாலியில் இராணுவ அரசாங்கம் அரசியல் கட்சிகளைத் தடை செய்து தமது ஆட்சியை காலவரையின்றி நீடித்துள்ள நிலையில் மக்கள் மத்தியில் விரக்தி அதிகரித்துள்ளது.
மாலி தலைநகரான பமாகோவில் கடந்த ஒருசில நாட்களில் இரண்டு உயர்மட்ட ஜெனரல்கள் உட்பட இராணுவ வீரர்கள் பலர் கைது செய்யப்பட்டதைத் அடுத்து பதற்றம் அதிகரித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை கடைகள் மற்றும் அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தாலும் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுவதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாலி இராணுவ அரசாங்கம் கைது நடவடிக்கைகள் குறித்து டிவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. எனினும் ஜெனரல் அசிமி கோய்டா அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் சதி திட்டங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராணுவ வீரர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.









