2030 ஆம் ஆண்டளவில் மின்னுற்பத்தியில் 70 சத வீதமான வலுசக்தி மூலங்கள் மீள்புதிப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து பெற்றுக் கொள்வதற்கும்இ 2050 ஆம் ஆண்டளவில் மின்னுற்பத்தியின் போது காபன் வெளியேற்றத்தை தடுப்பதை இலக்காகக் கொண்டும் அரசு மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தியை தேசிய முன்னுரிமையாக அடையாளங் கண்டுள்ளது.
அதனடிப்படையில் 2026- 2030 ஆம் ஆண்டில் மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் நடுத்தர 10 சதவீதமான மேற்பரப்புப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்ட 3,000 மெகாவோட் மதிப்பிடப்பட்ட மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி அளவுகளுடன் கூடிய ஆற்றல் வளங்களைக் கொண்ட நீர்த்தேக்கங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன.
சூரிய மின்னுற்பத்திக் கருத்திட்ட அபிவிருத்தியின் புதிய முறையாக மிதக்கும் சூரிய மின்னுற்பத்தியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முற்கூட்டிய சாத்தியவளக் கற்கைகள், சாத்தியவளக் கற்கைகள் மற்றும் சுற்றாடல் தாக்க மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக ஆலோசனைச் சேவையை வழங்குவதற்காக அங்கீகாரம் பெற்ற கம்பனிகளிடமிருந்து முன்மொழிவுகளினூடாக பெற்றுக்கொள்ளளும் செயன்முறையை ஆரம்பிப்பதற்காக வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.









