கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்கா ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தியமையயை அடுத்து பரவலாக உள்நாட்டில் கைது நடவடிக்கைகளை முன்னெடுத்தாக ஈரான் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க – ஈரான் யுத்ததின் போது 12 நாட்களில் 21 ஆயிரம் சந்தேக நபர்களை ஈரானிய பொலிஸார் கைது செய்ததாக அந்நாட்டின் சட்டதுறை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜூன் 13 திகதி ஆரம்பமான பாரிய வான்வழித் தாக்குதல்களில் இஸ்ரேலின் உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானிய பாதுகாப்புப் படைகள் சோதனைச் சாவடிகள் மற்றும் பொது அறிக்கைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தீவிரமான வீதிப் பாதுகாப்புடன் பரவலான கைது நடவடிக்கைகளை ஆரம்பித்தாகவும் மோதலின் போது இஸ்ரேலின் சார்பாக அமெரிக்கா ஈரானிய அணுசக்தி தளங்கள் பாரிய தாக்குதல்களை நடத்தியது.
ஜூன் மாத இறுதியில் இஸ்ரேலுக்காக உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு பேரை ஈரான் தூக்கிலிட்டது.
சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில் கிடைக்கப்பட்ட தகவல்கள் மூலம் பெரும் எண்ணிக்கையான சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக ஈரான் குறிப்பிடடுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா- ஈரான் யுத்ததில் ஈரானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவதற்கான திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் பிரஜைகள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் உரிய ஆதாரங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.









