கொழும்பு ஹோமாக பிரதேசத்தில் பரீட்சையில் புள்ளிகள் குறைந்தததால் ஆசிரியை திட்டியை ஏற்றுக்கொள்ள முடியாத 15 வயது பாடசாiலை மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தவணை பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் பெறுவதால் வகுப்பு ஆசிரியர் தொடர்ந்து அளித்த அழுத்தத்தை தாங்க முடியாமல் குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக நுகேகொட பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமி 4 பேர் கொண்ட குடும்பத்தில் இளையவர் எனவும் மாணவியின் தந்தை அதே பகுதியிலுள்ள மற்றொரு பாடசாலையின் அதிபர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தவணை பரீட்சையில் புள்ளிகள் குறைவடைந்தால் மற்ற மாணவர்கள் முன்னிலையில் தொடர்ந்து திட்டியதால் மன அழுத்தத்தில் இருந்த மாணவிக்கு சமீபத்தில் தலைவலி ஏற்பட்டுள்ளது.
பின்னர்இ மருத்துவ சிகிச்சை காரணமாக பாடசாலை செல்ல முடியாததால், மருத்துவ பரிந்துரையை கொண்டு வருமாறு பாடசாலை தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும் பரிந்துரையுடன் கூடிய மருத்துவ அறிக்கையை அவரால் கொண்டு வர முடியாததால்,அன்றைய தினம் வகுப்பு ஆசிரியர் மாணவியை பாடசாலையின் ஒழுக்காற்று அதிகாரியிடம் ஒப்படைத்து தண்டனை வழங்கியுள்ளார்.
இதனால் வருத்தமடைந்த மாணவி வீட்டிற்குச் சென்று உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துவிட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.









