கவிஞர் பொத்துவில் அஸ்மினின் எழுத்தில் உருவான மற்றுமொரு திரைப்பட பாடலுக்கான ஒலிப்பதிவு இன்று இடம்பெற்றது.
இயக்குனர் விக்னேஸ் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவுள்ள புதிய திரைப்படத்திற்கே பொத்துவில் அஸ்மின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்
சமந்த் நக் இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
‘வா தயங்காதே மாமா’ என ஆரம்பிக்கும் பாடலை
இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, ஹரீஸ் ஜெயராஜ், இமான், யுவன் என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் வெற்றிப்பாடல்களைப் பாடிய திரைப்பாடகர் ஆ.முகேஷ் பாட அவரோடு இணைந்து மலையாள திரைப்பாடகி அனிலா ரஜீவ் பாடியுள்ளார்.
ஏற்கனவே பொத்துவில் அஸ்மினின் வரிகளில் வெளியான ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்’ , ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ போன்ற பாடல்கள் இன்றுவரையும் ட்ரென்டில் உள்ளது.
அதற்கமைய தற்போது வெளியாகவுள்ள பாடலும் அனைவரையும் கவருமென நம்புவதாக கவிஞர் பொத்துவில் அஸ்மின் தெரிவித்துள்ளார்.









