சிறைக்கைதிகளின் உரிமைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று இன்றைய தி;னம் கொழும்பு காலி வீதியிலுள்ள ரேணுகா ஹொட்டெலில் நடைபெற்றது.
சிறைக்கைதிகள் தொடர்பான பணிபுரியும் நிறுவனங்கள், தனிநபர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அதனை எதிர்கொள்வது தொடர்பான விளக்கங்கள், கைதிகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை மையப்படுத்திய வகையில் செயலமர்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழு நிகழ்வை ஒழுங்குசெய்திருந்தது.
நாட்டில் கைதிகள் தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகள், அவற்றில் காணப்படும் குறைபாடுகள் , கடந்த கால வழக்குகள், கைதிகள் சிறைச்சாலையில் எதிர்கொள்ளும் இன்னல்கள், கைதிகளுக்கு சமூக ரீதியில் பெற்றுக்கொடுக்கக்கூடிய நியாயம், ஊடகவியலாளர்களினால் முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள், அதன்போது வளவாளர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும் ஊடகவியலாளர்கள் முன்வைக்கும் சந்தேகங்களுக்கான விளக்கங்களும் வளவாளர்களினால் வழங்கப்பட்டது.









