இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
2024 ஓகஸ்ட் மாதம் 16 ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ரியர் அட்மிரல் பானகொட பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய கடற்படைத் தலைமையகத்தில் ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவிடம் , கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நியமனக் கடிதத்தை கையளித்தார்.









