காலியின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்று (12) திங்கட்கிழமை பிற்பகல் 01.00 மணி முதல் நாளை (13) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய அக்மீமன, போபே , பொத்தல , ஹபராதுவ மற்றும் அஹுங்கம ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.









