இந்தியாவில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி , கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபானம் அருந்திய நிலையில் பலர் பாதிக்கப்பட்டனர்.
அதிகளவானோர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 16 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மதுபானம் அருந்துவதால் இந்தியாவில் வருடாந்தம் அதிகளவான மரணங்கள் பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.









