சர்வதேச தேநீர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடுவதற்கு பொகவந்தலாவ பீனீக்ஸ் கழக இளைஞர்கள் எடுத்த முயற்சி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தினமும் தேயிலை தொழிலோடு தமது வாழ்வியலை கொண்டுச்செல்லும் தொழிலாளர்களுக்கு கொட்டும் மழையில் ஒரு கோப்பை சூடான தேநீரை , அவர்கள் தொழில்செய்யும் இடங்களுக்கே சென்று இந்த இளைஞர்கள் வழங்கியுள்ளனர்.
உண்மையான தேநீர் தினத்திற்க்கு உரிமையாளர்கள் தோட்ட தொழிலாளர்களே என்ற எண்ணம் இந்த இளைஞர்களுக்கு தோன்றியுள்ளமை பாராட்டப்படவேண்டும்.
தோட்டங்களில் உரிய சம்பளமின்றி ,வெயில் ,மழை ,பனி இப்படி எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியில் உழைத்து உழைத்து உருமாறிய தமது தாய் தந்தையர்களுக்கு இந்த பீனக்ஸ் கழக இளைஞர்களும் ,சமூக நலன் விருப்பிகளும் இணைந்து முன்னெடுத்த இந்த செயற்பாடு பொகவந்தலாவ செப்பல்டன் P.S தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.









