நடிகை அம்பிகா மீது அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் மோசடி முறைப்பாடு தொடர்பில், அவரது சகோதரியும் நடிகையுமான ராதாவை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சென்னை பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி நேரில் ஆஜராகுமாறு நடிகை ராதாவுக்கு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் ராதாவிடம் விசாரணை நடத்தப்பட்டு, முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து அவரிடம் விளக்கம் பெறப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சென்னை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









