தந்திக் பரிமாற்றங்கள் (TT) மூலம் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு சுமார் 24.8 பில்லியன் ரூபாய்க்கு இணையான வெளிநாட்டு நாணயங்களை மாற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (FCID) கொட்டிக்காவத்தையில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
குறித்த நிதிப் பரிமாற்றங்கள் 2024 டிசம்பர் முதல் 2025 நவம்பர் வரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இலங்கைக்கு எவ்வித பொருட்களும் இறக்குமதி செய்யப்படாத நிலையில், இந்த நிதி வெளிநாட்டுக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சூழ்நிலைகள் குறித்து FCID மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.









