Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இந்து குருமார்கள் குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

புரட்டாதி 11, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
இந்து குருமார்கள் குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

இன, மத நல்லிணக்கம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு இந்து குருமார்கள் ஆசீர்வாதம்

கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்த இந்து குருமார்கள் குழுவினர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக எந்தவொரு இனவாத மோதலுக்கும் இடமளிக்காமல், அனைத்து மக்களுக்கும் இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு இந்து குருமார்கள் தமது ஆசிகளையும் ஆதரவையும் தெரிவித்தனர்.

அத்துடன், நாட்டின் எதிர்கால சந்ததியினரை பாதித்து வரும் போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் வேலைத்திட்டங்களுக்கும் அவர்கள் தமது ஆசிகளை வழங்கினர்.

இனவாதத்திற்கு எதிராக மதத் தலைவர்களின் பங்களிப்பு

மதம் அல்லது கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தைப் பரப்புவதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சிக்கும் தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக இந்து குருமார்கள் தெரிவித்தனர்.

மதத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டியது அனைவரிடமும் அன்பையும், நல்லிணக்கத்தையும் பகிர்ந்து கொள்வதே எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

போதைப்பொருள் ஒழிப்பு தேசியப் பொறுப்பு

போதைப்பொருள் பேரழிவுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது எந்தவொரு தனிநபராலோ அல்லது நிறுவனத்தாலோ மாத்திரம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை அல்ல எனக் குறிப்பிட்ட இந்து குருமார்கள், அது முழு சமூகமும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொள்ள வேண்டிய தேசியப் பொறுப்பு என வலியுறுத்தினர்.

இந்த தேசிய வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாகவும் வலுவாகவும் முன்னெடுத்துச் செல்வதற்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரதும் தீவிர பங்களிப்பு அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்து குருமார்களுக்கான ஒருங்கிணைந்த பொறிமுறை

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் இந்து குருமார்கள் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய முறையான பொறிமுறையொன்றை உருவாக்கித் தருமாறும் இந்து குருமார்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதன் மூலம் இந்து அறநெறிப் பாடசாலைகளை நடத்துவது உள்ளிட்ட இந்து பக்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி, அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்து மதத்தில் பல்வேறு மதப் பாரம்பரியங்கள், நம்பிக்கைகள் மற்றும் அடையாளங்கள் காணப்படுவதுடன், அதற்கு ஒற்றைத் தலைமைத்துவக் கட்டமைப்பு இல்லாத நிலையில் அதன் பன்முகத்தன்மையை ஒரே முறையில் ஒருங்கிணைக்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனினும், அந்த மத அடையாளங்களையும் பாரம்பரியங்களையும் பாதுகாத்துக்கொண்டு, பொதுவான சமூக நோக்கங்களுக்காக கூட்டாகச் செயற்படக்கூடிய குருமார்களின் ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றை உருவாக்குவது முக்கியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதன்படி, இந்து மதத்தின் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்து, அனைத்துத் தரப்பினரதும் பங்களிப்புடன் பொதுவான சமூகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரின் பங்களிப்புடன் தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

முக்கியஸ்தர்கள் பங்கேற்பு

இராமகிருஷ்ண மிஷனின் கொழும்பு நிலையப் பொறுப்பாளர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகராஜ், சின்மயா மிஷனின் கொழும்பு நிலையப் பொறுப்பாளர் சுவாமி குணாதீத்தாநந்த சரஸ்வதி, பிரம்மசிரி எஸ். சிவநேசன் சர்மா, சத்தியசீலன் உமாகாந்த் சிவாச்சாரியார் உள்ளிட்ட இந்து குருமார்கள் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி

நவம்பர் தேர்தலுக்குப் பின்னர் ஈரான் போர் முடிவுக்கு வரும் – ட்ரம்ப்

அடுத்த செய்தி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜர்

தொடர்புடைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!
அண்மைய செய்திகள்

சபரிமலை தங்கக் கிரீடம் விவகாரம் – புதிய திருப்பம்!

புரட்டாதி 24, 2026
23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

23 ஆண்டுகள் கோவில் சேவை செய்த குதிரை உயிரிழப்பு

புரட்டாதி 24, 2026
டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி
அண்மைய செய்திகள்

டிரம்பின் ஈரான் எச்சரிக்கைக்கு பாலகிருஷ்ணா திரைப்படக் காட்சியுடன் ஈரான் பதிலடி

புரட்டாதி 24, 2026
ஹெட்டனில் பிரபல  பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

ஹெட்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

புரட்டாதி 24, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்லையில் SJB ஆர்ப்பாட்டம்

புரட்டாதி 24, 2026
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி
அண்மைய செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய WhatsApp வசதி

புரட்டாதி 24, 2026
வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 24, 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்
அண்மைய செய்திகள்

டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள்   நான்கு நாட்களுக்கு இடைநிறுத்தம்

புரட்டாதி 24, 2026
அடுத்த செய்தி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜர்

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.