வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் நிறுத்த வேண்டுமென சவூதி அரேபியா எச்சரித்துள்ளது.
தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர தம்மிடமுள்ள அனைத்து அரசியல், பொருளாதார மற்றும் ராஜதந்திர வழிகளையும் பயன்படுத்தவுள்ளதாக சவூதிஅரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது தவறான கணிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும், தாக்குதல்களை மேற்கொள்வது எந்தவொரு பலனையும் அளிக்காதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் ஒன்றிணைந்த சர்வதேச நடவடிக்கைகள் தேவையென சவூதிஅரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் தெரிவித்துள்ளார்.









