ஹிஜ்ரி 1447 புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை , கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாட்டில் எப்பாகத்திலாவது ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் , இலங்கைவாழ் முஸ்லிம் மக்களிடம் கோரியுள்ளது.









