நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை தொடர்பில் சிறுவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் வெப்ப நிலைமை அதிகரித்துள்ளமையால், வெப்பமான இடங்களில் நிற்றல், அதிக உடற்பயிற்சி, காற்றோட்டமின்மை போன்ற காரணிகளால் ஹீன் ஸ்ரோக் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
இதனைத் தடுப்பதற்கு அதிக நீர் அருந்த்துதல், உடற்பயிற்சியினை தவிர்த்தல், மெல்லிய பருத்தி ஆடைகளை அணிதல், மதுபானம், சூடான பானங்களை அருந்துவதை தவிர்த்தல், காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணிவரை வெளியில் வேலை செய்வதை தவிர்த்தல் நல்லதென வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.









