நாட்டில் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரையில் எவ்வித உத்தியோகபூர்வ தீர்மானங்களும் எடுக்கப்படவில்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்களை மேற்கொள்ள நேரிடுமென இப்போது துல்லியமாகக் கணிக்க முடியாது.
யுத்த நிலை மேலும் உக்கிரமடைந்தால் கூட , அதனால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கான முன்னேற்பாட்டுத் திட்டங்களையே அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தி வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் மின் விநியோகத்தைப் பாதிப்பின்றி முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் | முதன்மையான நோக்கமென அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.









